Sunday, May 04 12:51 pm

Breaking News

Trending News :

no image

#ChessOlympiad திமுக அரசை பார்த்து…சர்வதேச செஸ் அமைப்பு சொன்ன வார்த்தை.. கடுப்பில் பாஜக


சென்னை: எங்கேயும் இல்லாத வகையில் செஸ் விளையாட்டை தமிழக அரசு முன்னிறுத்தி விளம்பரப்படுத்துவதாக சர்வதேச செஸ் பெடரேஷன் பாராட்டு மழை பொழிந்துள்ளது.

யாரும் எதிர்பாராத வண்ணம் சென்னையில் சர்வதேச ஒலிம்பியாட் தொடர் துவக்க விழா களைகட்டியது. உலக நாடுகளின் வீரர்கள், அவர்களின் பிரதிநிதிகள், கண்கவர் இசை நிகழ்ச்சி, நடனங்கள் என அசத்தல் அம்சங்களுடன் பார்ப்போருக்கு ஏக விருந்தாய் அமைந்திருக்கிறது.

தொடக்க விழா அருமையோ, அருமை என்று நெட்டிசன்கள் இணையத்தை போட்டு படுத்தி எடுக்க, டுவிட்டரிலும் டிரெண்டிங்கில் இருக்கிறது #ChessOlympiad

இந்த போட்டி தொடரை நடத்துவதில் மத்திய அரசின் பங்கு இருக்கிறது, இல்லாமல் எப்படி நடத்தமுடியும் என்று பாஜகவினர் கேள்வி மேல் கேள்விகளை கேட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

ஆனால் அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக ஒலிம்பியாட்டை தமிழக அரசு கையாண்டு அந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை திமுகவினர் ஜெட் ஸ்பீடில் புரோமோட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சர்வதேச செஸ் பெடரேஷன் தமிழக அரசின் ஏற்பாடுகளையும், எடுத்துக் கொண்டுள்ள அக்கறையையும் சுட்டிக்காட்டி டுவிட்டரில் பாராட்டு ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் ஒலிம்பியாட்டை பற்றி அனைத்து தரப்பினரிடமும் எடுத்து செல்லும் பொருட்டு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி உள்ளது.

அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது. எதிர்பார்க்காத அளவு விழிப்புணர்வையும், ஒலிம்பியாட்டை விளம்பரப்படுத்துவதிலும் அருமையாக செயல்பட்டு உள்ளது என்று பாராட்டு தெரிவித்து இருக்கிறது. நாடு முழுவதும் இன்றைய தொடக்கவிழா பற்றி விளம்பரப்படுத்தி உள்ளதை போட்டோவாக போட்டு தமது வாழ்த்துகளை கூறி உள்ளது. இதை கண்டு பாஜகவினர் ஒரு பக்கம் காண்டாக, திமுகவினரோ குஷியின் எல்லைக்கே போயிருக்கின்றனர் என்பது தனிக்கதை.

Most Popular