சென்னை யூனியன் பிரதேசமாகிறதா…? மத்திய அரசு வெளியிட்ட பதில்….!
டெல்லி: சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்கள் யூனியன் பிரேதேசங்களாக அறிவிக்கப்படும் திட்டம் ஏதும் தற்போது மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்து உள்ளார்.
மக்களவையில் அண்மையில் பேசிய மஜ்லிஸ் கட்சி தலைவரும், எம்பியுமான அசாதுதீன் ஓவைசி ஜம்முகாஷ்மீர் போன்று ஐதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களும் விரைவில் யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் திட்டம் மத்திய அரசு தரப்பில் இருப்பதாக கூறினார்.
அவரது இந்த பேச்சு அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மத்திய அரசின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.
சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே இந்த நகரங்கள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கும் திட்டம் இல்லை என்று கூறினார்.