135 வாரிசுகள் முன்னாடி 37வது கல்யாணம் பண்ணிய முதியவர்…! வைரல் வீடியோ
முதியவர் ஒருவர் 37வது கல்யாணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஒரு திருமணம் செய்து கொள்வதே படாதபாடு…! அதுவும் இப்போதைய காலகட்டத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்றால் அவ்வளவு எளிதல்ல. பலருக்கு கல்யாணம் ஆகி வாழ்க்கை மாறியது உண்டு… சிலருக்கும் திருமணம் அவர்களின் திசையையும் மாற்றி இருக்கிறது.
இன்னும் பலரோ.. ஏன்தான் திருமணம் செய்து கொண்டோம் என்று தெரியல என்று புலம்பி தள்ளுவர். ஆனால் இதை எல்லாத்தையும் ஒரு முதியவர் ப்பூ என்று ஊதி தள்ளி இருக்கிறார். அவர் 37வது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் திக்கு, திசை தெரியாமல் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஆஹா…என்ன துணிச்சலான மனிதன் இவர் என்று தமது பதிவுக்கு தலைப்பும் கொடுத்து அசத்தி உள்ளார். இந்த கல்யாணம் 28 மனைவிகள் முன்னிலையில் ஏக சந்தோஷத்துடன் நடத்தப்பட்டுள்ளது. 28 மனைவிகளும் 37வது மனைவியை முத்தமிட்டு வாழ்த்து தள்ளி இருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த முதியவருக்கு 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது 37வது திருமணம். ஏதோ வெளிநாடு ஒன்றில் படம் பிடிக்கப்பட்ட நிகழ்வாக இந்த சம்பவம் இருக்கிறது. ஆனால் எந்த நாடு என்பது பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.