கொரோனாவில் இருந்து குணமான டிரம்ப்…! ஆனால்…?
வாஷிங்டன்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்.
உலகை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. கொரோனாவுக்கு மத்தியில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்ககிறது.
குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் களம் இறங்குகிறார். அதற்காக நாடு முழுவதும் அவர் சூறாவளி பிரசாரத்தில் உள்ளார். இந் நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா இருப்பது சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் சேர்க்கப்பட்டார். 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ மருத்துவமனையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகை புறப்பட்டார். இது குறித்து கூறியுள்ள மருத்துவக்குழு, டிரம்புக்கு ரெம்டெசிவர் மருந்து 5வது டோஸ் தரப்பட்டுள்ளது. வீடு செல்லும் அளவுக்கு அவர் தேறிவிட்டார், இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.