இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
மும்முனை போட்டி நிலவும் தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்ற காலை தொடங்கி உள்ளது. தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் ஆண்கள், பெண்கள் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
சென்னையில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாத மழையால் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கனமழையை தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு 1500 கன அடியில் இருந்து 2429 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
நடிகர் விஜயகாந்த் விரைவில் குணம் அடைய வேண்டும் என்று இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். தன்னலமற்ற மனிதநேய பண்பாளரான அவர் நலம்பெற்று சிறந்து விளங்க எல்லாம்வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
2020ல் 11.80 லட்சம் கோடி செலவு செய்யப்படும், பிரதமரின் இலவச உணவு தானிய திட்டத்தை 2023ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கனமழை காரணமாக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
558வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.
லக்னோவில் நடந்து வரும் சர்வதேச பேட்மிண்ட்டன் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனித் இருவரும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.
பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராம் சரண், எஸ்ஜே சூர்யா ஆகியோரின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.