முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அட்மிட்…! என்னாச்சு…?
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை இருப்பது உறுதியாக, தம்மை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் முக கவசம் அணிந்து தடுப்பூசி போட்டு கொண்டு பாதுகாப்பாய் இருப்போம் என்று கூறி இருந்தார்.
இந் நிலையில், சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. சிடி ஸ்கேன் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைகளுக்காக அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது.