ரூ.6060 கோடி… நம்பர் எங்க சார்..? SBIஐ உலுக்கிய கோர்ட்
பாஜகவுக்கு 6060 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை கொடுத்தாச்சு… தேர்தல் பத்திரங்களின் எண்கள் எங்கே? என்று எஸ்பிஐ வங்கியை சுப்ரீம்கோர்ட் உலுக்கி எடுத்து இருக்கிறது.
அமலாக்கத்துறை, தேர்தல் பத்திரம், எஸ்பிஐ என மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது உச்ச நீதிமன்றம். தேர்தல் பத்திரத்தில் வெளிப்படை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் தான் மத்திய அரசுக்கு இந்த நிலைமை.
தேர்தல் பத்திரங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட, ஏதேதோ சாக்கு சொன்ன எஸ்பிஐ கடைசியில் வேறு வழியின்றி அதை அளித்துள்ளது. அதில் உள்ள விவரங்கள்தான் இப்போது பாஜகவை உலுக்க ஆரம்பித்து இருக்கிறது.
அறிக்கையில் 2019ம் ஆண்டு முதல் 2024 வரை மொத்தம் 22217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு உள்ளதாக கூறிய எஸ்பிஐ, அந்த விவரங்களை தாக்கல் செய்தது. அதில் பாஜகவுக்கு மட்டும் 6060 கோடி ரூபாய் தரப்பட்டு உள்ளது. பாஜகவுக்கு அடுத்த திரிணாமூல் காங். 1609 கோடி நன்கொடையாக வாங்கி இருக்கிறது.
அதிகளவாக லாட்டரி நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்டு ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் 1368 கோடி தந்துள்ளது.இன்னும் பல நிறுவனங்கள் இந்த பட்டியலில் இருக்க, தற்போது மேலும் ஒரு அதிரடியை உச்ச நீதிமன்றம் காட்டி இருக்கிறது.
இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வங்கி நிர்வாகம் தாக்கல் செய்ய, அவற்றை பரிசீலித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்கள் எங்கே? ஏன் அதை வெளியிடவில்லை என்று கேள்வி கேட்டுள்ளனர்.
அனைத்து விவரங்களையும் வெளியிட சொல்லியிருந்தோமே? எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.