Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

நடிகர் விஜய்க்கு இப்படியா..? லோகேஷ் செய்யும் சம்பவம்…!


சென்னை: நடிகர் விஜய்க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தின் லேட்டஸ்ட் தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இளம் இயக்குநர்களில் தனி முத்திரை பதித்து இருப்பவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் மூலம் கமலுக்கு கம்பேக் கொடுத்துள்ளதால் இன்று கோலிவுட்டில் இவருக்கு தான் டிமாண்ட்.

அடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க உள்ளார். அந்த படத்துக்கு இன்னமும் பெயரிடப்படாத நிலையில் தளபதி 67 என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

தளபதி 67 படத்தின் ஒவ்வொரு தகவல்களும் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் தந்து வருகிறது. அதில் லேட்டஸ்ட்டாக படத்தின் முக்கிய விஷயங்கள் பற்றிய செய்தி தான். படத்தில் 6 வில்லன்கள் என்று ஒரு தகவல் கோலிவுட் முழுக்க உலா வந்து கொண்டிருக்கிறது. படத்தில் இரட்டை கதாநாயகிகள் என்று போனசாக ஒரு செய்தி ஓடிக் கொண்டு இருக்கிறது.

இப்போது அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடி கிடையாதாம். இது மட்டுமல்லாமல் பஞ்ச் வசனங்களும் இவருக்கு இல்லையாம்… கதாநாயகி இல்லை, பாட்டு இல்லை, அனல் தெறிக்கும் வசனங்களும் இல்லையா? என்னப்பா இது என்று ரசிகர்கள் இப்போது கதிகலங்கி போய் உள்ளனராம்.

அதே நேரத்தில் விக்ரம்மில் செய்த சம்பவம் போல, நடிகர் விஜய்க்கு இந்த படம் மூலம கட்டாயம் ஒரு சூப்பர் சம்பவம் காத்திருக்கிறது என்று ஒரு ரசிகர் பட்டாளம் இணையத்தில் தகவல்களை வெளியிட்டு வருகிறது. படத்தின் அனைத்து விவரங்களும் பற்றிய முழு தகவல்களை கூடிய விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு போனஸ் தகவல் ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொள்ள வைத்திருக்கிறது.

Most Popular