காங்கிரசுக்கு மூளையிருக்கா? இல்லையா? சென்னை ஏர்போர்ட்டில் காய்ச்சிய குஷ்பு
சென்னை: காங்கிரஸ் கட்சி மூளையில்லாத கட்சி என்று நேற்று பாஜகவில் இணைந்த குஷ்பு விமர்சித்துள்ளார்.
போன வாரம் காங்கிரசில் இருந்து பாஜகவை சரமாரியாக விமர்சித்த நடிகை குஷ்பு, நேற்று திடீரென பாஜகவில் இணைந்து பிரதமர் மோடி புகழ் பாடினார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டார்.
இன்று சென்னை திரும்பிய காவிப்பூ குஷ்பு, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மூளையில்லாத கட்சி என்று கடுமையாக விமர்சித்தார். அவர் மேலும் கூறியதாவது:
காங்கிரசில் இருக்கிறவர்களுக்கும், கட்சியை விட்டு செல்கிறவர்களுக்கும் மரியாதை இல்லை. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா?
காங்கிரஸ் கட்சியினர் நடிகையாகத்தான் என்னை பார்த்தனர். எல்.முருகன் எடுத்த முயற்சியால்தான் நான் பாஜகவில் இணைந்துள்ளேன் என்று கூறினார்.