இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்கணுமா..? ரேஷன் கார்டில் இதை செய்யுங்க..!
சென்னை: ரேஷன் கார்டில் முக்கிய மாற்றத்தை செய்தால் தமிழக அரசின் 1000 ரூபாய் பெறும் பயனாளியாக பெண்கள் மாறிவிடலாம்.
திமுகவில் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை தரும் திட்டம். திமுக பிரச்சாரம் சென்ற இடங்களில் எல்லாம் இந்த கோரிக்கைக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
இப்போது பெண்களிடம் இருந்து 1000 ரூபாய் எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்து வருகிறது. திமுக சொன்ன இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை 1000 ரூபாய் எப்போது கிடைக்கும்? இந்த மாதம் கிடைக்குமா? அடுத்த மாதமா? என்ற எதிர்பார்ப்பு நாள்தோறும் எழுந்து வருகிறது.
செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர்கள் எவ வேலு, அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் பாசிட்டிவ்வான தகவல்களை அளித்து வருகின்றனர். தமிழக அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் பற்றி முதல்வர் அறிவிப்பார் என்று கோரசாக அவர்கள் கூறி வருகின்றனர்.
எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டாலும் 1000 ரூபாய் உறுதி தானே என்ற நம்பிக்கையில் இல்லத்தரசிகள் காத்திருக்கின்றனர். அதே சமயத்தில் ரேஷன் கார்டில் குடும்ப தலைவியின் பெயர் மட்டுமல்ல, போட்டோவும் இருக்க வேண்டும் என்று ஒரு தகவல் பரவி மக்களிடம் இன்னமும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.
இது பற்றி தெளிவான, அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை. அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்று அவர்கள் கூறி உள்ளனர். சரி… நடப்பது நடக்கட்டும்… ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் இன்னமும் பரவலாக பலருக்கும் உள்ளது.
அதற்கான வழிமுறைகளை இப்போது பார்ப்போம்:
- https://www.tnpds.gov.in என்ற இணைய பக்கத்துக்கு முதலில் நுழையவும்.
- பின்னர் பயனாளர் என்பதை செலக்ட் செய்யவும்.
- உங்கள் செல்போன் எண் பதிவிட வேண்டும், பின்னர் கேபாச்சா (capatcha) நம்பரை டைப் செய்யவும்.
- குடும்ப தலைவர், உறுப்பினர்கள் பெயர்கள் வரும்.
- குடும்ப தலைவர் பெயர், புகைப்படம் மாற்றம் செய்ய விரும்புவர்கள் அட்டை பிறழ்வுகள் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- புதிய கோரிக்கையை தேர்வு செய்து, புகைப்படம், பெயர் மாற்றலாம்.
- அனைத்து வழிமுறைகளையும் சரிபார்த்து ஓகே தரவும், கோரிக்கை ஏற்கப்பட்டு விடும்.