MP Election 2023: பாஜக ஜெயிக்க கலெக்டர் செய்த வேலை… ஷாக் வீடியோ
போபால்: மத்திய பிரதேசத்தில் வாக்கு பெட்டிகளை கலெக்டர் திறந்த ஷாக் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 17ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்துக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. வரும் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந் நிலையில் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பின் கீழ் ராணுவ பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. இப்படி வைக்கப்பட்டு உள்ள அறை ஒன்றில் நிகழ்ந்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
பாலகாட் என்ற மாவட்டத்தில் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு உள்ள அறையில் மாவட்ட ஆட்சியர் கிரிஷ் மிஸ்ரா சென்றிருக்கிறார். அங்கு அவர் தபால் வாக்கு பெட்டிகளை திறந்திருக்கிறார். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தமது இணையத்தில் வெளியிட்டு உள்ளது.
வேட்பாளர்கள், கட்சியின் முகவர்கள் என யாருக்கும் முறைப்படி அறிவுப்பு கொடுக்காமல் அறைக்குள் நுழைந்து எப்படி வாக்கு பெட்டிகளை திறக்கலாம்? என்ன அதிகாரம் இருக்கிறது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது குறித்து தேர்தல் ஆணையத்தை நாடி உள்ள காங்கிரஸ், சம்பந்தப்பட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக இவ்வாறு செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.