Sunday, May 04 12:48 pm

Breaking News

Trending News :

no image

உலகின் காஸ்ட்லி மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்…! இந்தியாவில் விளையுது..! எங்கே தெரியுமா..?


போபால்: மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை கொண்ட மாம்பழ வகை விளைந்து வரும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.70 லட்சமாகும்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது ஜபல்பூர். இங்கு சங்கல்ப், ராணி தம்பதிக்கு சொந்தமாக பழத்தோட்டம் இருக்கிறது. கடந்த 2 வருஷங்களுக்கு முன்னர் இவர்கள் 2 மரக்கன்றுகளை தங்களது தோட்டத்தில் நட்டு வைத்துள்ளனர். தொடக்கத்தில் நட்டு வைத்த போது வழக்கமான சாதாரணம மாமரம் என்று தான் நினைத்திருந்தனர்.

ஆனால் பின்னர் தான் அந்த மாம்பழம் அரிய வகை ஜப்பான் மாம்பழம் என்பது தெரிய வந்தது. ஜப்பான் மாம்பழத்தின் பெயர் மியாசகி (miyazaki) என்பதாகும். இந்த மாம்பழத்தின் சிறப்பை கேட்டால் மயக்கம் வரும்.

உலகிலேயே விலை உயர்ந்த மாம்பழ வகையான இதன் ஒரு கிலோ 2.70 லட்சம் ரூபாயாகும். காரணம் அதன் ருசி. சங்கல்ப், ராணி தம்பதிக்கு இந்த மரக்கன்று எப்படி கிடைத்தது என்பதே சுவாரசியமான ஒன்று.

சென்னைக்கு இந்த தம்பதியினர் மரக்கன்றுகள் வாங்க வந்திருக்கின்றனர். அப்போது ரயிலில் இவர்களை சந்தித்த நபர் ஒருவர் இந்த மரக்கன்றை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். இவர்களும் வெகு சாதாரண மரக்கன்று என்று தான் பாதுகாத்து வளர்த்திருக்கின்றனர்.

கடந்தாண்டு இவர்களின் தோட்டத்தில் புகுந்த திருடர்கள் மாம்பழங்களை திருடி உள்ளனர். அதன் பிறகு தான் 4 காவலாளிகள், 6 நாய்களை காவலுக்காக சங்கல்ப், ராணி தம்பதியினர் போட்டுள்ளனர்.

ஜப்பான் வகை மாம்பழம் என்பதால் ஒரு மாம்பழத்தை 21 ஆயிரம் கொடுத்து வாங்க வியாபாரிகள் தயாராக உள்ளனர். ஆனால் இவர்கள் விற்காமல் மரங்கள் வளர்க்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்தியாவில் மிக அரிய வகையான மாம்பழம் என மத்திய பிரதேச தோட்டக்கலைத் துறையினர் உறுதிப்படுத்தி உள்ளனர் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பம்சம்.

Most Popular