கொரோனா தடுப்பூசியின் அற்புதம்…! கண்பார்வையற்ற பாட்டிக்கு நடந்த மேஜிக்...!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கண் தெரியாத பாட்டி ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டபின்னர் பார்வை வந்துளளது, பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களை பாடாய்படுத்திய கொரோனாவின் 2வது அலை சற்றே தமது குறைந்து ஆறுதலை தந்துள்ளது. ஆனாலும் அதன் தாக்கம் இன்னமும் பல மாநிலங்களில் குறையவில்லை என்றே கூறலாம்.
கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என்று மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் உடல்நிலை பாதிக்கும் என்று ஒரு தரப்பு மக்கள் இன்னமும் நம்பி கொண்டு இருக்கின்றனர்.
ஆனால் அது உண்மையில்லை என்று மருத்துவ உலகம் விளக்கி கூறினாலும், படிப்பறிவில்லாத மக்கள் இன்னமும் புரியாமல் தான் உள்ளனர். நிலைமை இப்படி இருக்க, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாட்டி ஒருவருக்கு கண் பார்வை வந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா…?
அப்படி ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. மாதுரபாய் பித்வி என்ற அந்த மூதாட்டிக்கு வயது 70. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாசிம் மாவட்டத்தில் பெந்தர்வாடி என்ற ஊரை சேர்ந்தவர்.
9 ஆண்டுகளாக அவருக்கு கண் பார்வை இல்லை. கண்புரை நோயால் அவரது இரு கண்களும் பாதிக்கப்பட… ஒரு கட்டத்தில் கண் பார்வை பறிபோயிருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி இவர் கொரோனாவின் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். அப்போது 30 முதல் 40 சதவீதம் வரை பார்வை வந்துள்ளதாக அவர் கூற யாரும் நம்பவில்லை.
அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாள் அவர் இப்படி கூறி இருக்கிறார். அவர் போட்டுக் கொண்டது கோவிஷீல்டு தடுப்பூசி. கொரோனா தடுப்பூசி போட்டவுடன் கண் பார்வை மீண்டும் வந்திருப்பது எப்படி என்று புரியாமல் மருத்துவ வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் உள்ளனர்.