தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…! 3வது நாளாக கொரோனா சொன்ன செய்தி...!
சென்னை: தமிழகத்தில் 3வது நாளாக, கொரோனா பாதிப்பானது ஆயிரத்தை கடந்துள்ளது, அதிர்ச்சியை தந்துள்ளது.
சும்மா இருந்தவர்களை சொரிந்து விட்டது போன்று தேர்தல் பிரச்சாரம் என்ற விஷயம் இப்போது கொரோனாவுடன் கை கோர்த்துவிட்டது போலும். தமிழகத்தில் சமீபகாலமாக குறைந்திருந்த கொரோனா தொற்றும் இன்றும் உயர்ந்தே காணப்படுகிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 24 மணிநேரத்தில் 75258 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. புதியதாக 1,289 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,66,982 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 668 போ் குணமடைய ஒட்டுமொத்தமாக குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8,46,480 ஆக உள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,903 போ் சிகிச்சையில் உள்ளனா். மேலும் 9 போ் பலியாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,599 ஆக உயா்ந்துள்ளது. அதிகளவாக சென்னையில் மட்டும் 466 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.