நம்ம ஊரு எம்எல்ஏ பண்றாரு..? திமுக ஆட்சியில் சட்டசபை நடவடிக்கைகள் நேரலை ஒளிபரப்பு
சென்னை : திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டசபை நடவடிக்கைகள் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், 'திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு முதல் கதாநாயகன், 2வது கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்றும் டி.ஆர்.பாலு தலைமையிலான குழு திமுக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது என்றும் கூறினார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்..
*சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்
*தமிழக தொழில்நிறுவனங்களில் தமிழருக்கு 75% வேலைவாய்ப்பு வழங்க சட்டம்.
*நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டசபை கூட்டத் தொடரில் சட்டம் கொண்டுவரப்படும்.
*பயிற்சி முடித்த 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு ரூ1,000 கோடி ஒதுக்கப்படும்
*ஆட்டோ தொழிலாளர் ஆட்டோ வாங்க ரூ10,000 மானியம் வழங்கப்படும்
*அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கப்படும்
*நீர்மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டம் கொண்டுவரப்படும்
*பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளருக்கு தனிநல வாரியம் உருவாக்க்கப்படும்
*அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும்
*மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
*8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்