21 வருஷமா உடம்புல பிரச்னை… மறைத்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் அதிர்ச்சி
முன்னணி நடிகரான மம்முட்டிக்கு 21 ஆண்டுகள் உடலில் கோளாறு இருக்கும் விவரம் தெரிந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தேசிய ஒரு முறை அல்ல 4 முறை பெற்ற நடிகர் மம்முட்டி. இயக்குநர், தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மலையாளம் மட்டுமல்லாது தமிழ், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.
கேரளாவில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட விழாவை அண்மையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசிய சில விஷயங்கள் தான் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
அவர் கூறிய விவரம் இதுதான்: எனது இடதுகால் தசை நார் சேதம் அடைந்து 21 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்படி செய்தால் கால் குட்டையாகி விடும்.
என்னை அனைவரும் கிண்டல் செய்வார்கள். அதனால் தான் ஆப்ரேஷன் செய்து கொள்ளவில்லை என்று கூறினார். காலில் உள்ள காயத்துக்கு 21 ஆண்டுகள் சிகிச்சை பெறாமல் இருந்த விவரம் கண்டு அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
இந்த கோளாறை வைத்துக் கொண்டா அவர் இத்தனை காலம் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார்… ஆச்சரியமாக இருக்கிறதே என்றும் கூறி உள்ளனர்.