8ம் வகுப்பு படிச்சிருக்கீங்களா..? இதோ ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!
சென்னை: தமிழ்நாடு மீன்வளத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சம் 30 வயதும் இருத்தல் அவசியம். தமிழ்நாடு மீன்வளத்துறையில் மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.
வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், 31.07.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பில் கேட்கப்பட்டு உள்ளது போன்று அனைத்து தகுதிகளும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு சென்னையில் பணியிடம் ஒதுக்கப்படும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பும் நபர்கள் www.fisheries.tn.gov.in என்று இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.