Sunday, May 04 12:46 pm

Breaking News

Trending News :

no image

பிரபல இயக்குநர் குடும்பத்தில் 14 பேருக்கு கொரோனா..! சோகமோ சோகம்…!


சென்னை: பிரபல சினிமா இயக்குநர் ரத்தினகுமாரின் குடும்பத்தில் கிட்டத்தட்ட 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ரத்தினகுமார். இவர் அமலாபால் நடித்த ஆடை, மேயாத மான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்திலும் பணிபுரிந்தவர்.

இவர் இப்போது சோகமான ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். அவரது குடும்பத்தில் 15 மாத குழந்தை முதல் 14 பேருக்கு கொரோனா தொற்றி இருக்கிறது. இது குறித்து அவர் தமது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:

15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேறினர்.  கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு வீடு திரும்பியது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Most Popular