Sunday, May 04 11:56 am

Breaking News

Trending News :

no image

#Vijayakanth அழுத ரஜினிகாந்த்…!


விஜயகாந்த் பற்றி கூறும் போது நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கி, நா தழுதழுத்தது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள விஜயகாந்தின் உடலை காண, அஞ்சலி செலுத்த தமிழகம் எங்கும் இருந்து தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னை நகரமே மக்கள் வெள்ளத்தில் திணறி போயுள்ளது.

அவரின் மறைவை நேற்றே அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தமது படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு இன்று தீவுத்திடல் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா, சுதிஷ், மகன்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கண்கலங்கி, நா தழுதழுக்க  அவர் பேசியது;

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு, விஜயகாந்த் பத்தி பேசும்னா எவ்வளவோ இருக்கு. முக்கியமா அவரோட நட்பு, நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். ஒரு தடவை பழகிட்டா அவரை மறக்கவே முடியாது, அவருக்கான உயிரையே கொடுக்க ரெடியா இருக்காங்க.

விஜயகாந்த் கோபத்துக்கு பின்னர் நியாயமான காரணம் இருக்கும், சுயநலம் இருக்காது. நான் உடம்பு சரியில்லாம மருத்துவமனையில் சுயநினைவு இல்லாமல் இருந்தேன்.

அப்போ நிறைய பேரால் தொந்தரவு இருந்தது. அங்கே விஜயகாந்த் வந்து என்ன பண்ணினாருன்னு தெரியாது எல்லாத்தையும் clear பண்ணினாரு. மறக்கவே முடியாது என்று கண்கலங்கினார் ரஜினிகாந்த்.

Most Popular