ஸ்டாலினை திடீரென சந்தித்த கமல்ஹாசன்…! உடன் சென்ற ‘அந்த’ 2 பேர்….!
சென்னை: திமுக தலைவரும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளவரும் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீரென சந்தித்து உள்ளார்.
தமிழக தேர்தல் களத்தில் திமுகவுக்கு நேர் எதிரான களத்தில் இருந்து தேர்தலை சந்தித்தவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் தாம் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்து ஆச்சரியம் காட்டினார்.
தேர்தல் முடிவில் தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் இருந்தும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார்.
ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு 2 பேருடன் கமல்ஹாசன் சென்றார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெற்ற அபார வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். கிட்டத்தட்ட 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். முன்னதாக தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு அறிக்கை வாயிலாக கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.