கொரோனாவை ஓட, ஓட விரட்டிய நாடு….! எப்படி இது சாத்தியம்..?
லண்டன்: இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக இருந்த நாடு இங்கிலாந்து. அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றுக்க இலக்காகினர். உச்சக்கட்டத்தில் இருந்த கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி பணிகளும் முன்பை விட வேகமாக முன் எடுக்கப்பட்டன. இடைவிடாது கொரோனா தடுப்பூசி பணிகள், முழு ஊரடங்கு ஆகியவற்றின் எதிரொலியாக தற்போது ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
நேற்று முன்தினம் இங்கிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை. பிரிட்டன் பிராந்தியங்களான ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.