#Seeman தண்ட கருமாந்திரம்… கலைஞர் பேனா சின்னத்தை விமர்சித்த சீமான்…!
திருச்சி: கடலில் கலைஞர் கருணாநிதியின் பேனா சின்னம் வைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதை தண்ட கருமாந்திரம் என்று விமர்சித்து உள்ளார்.
திருச்சியில் அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தற்போதைய அரசியல்கால நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் பதிலளித்தார். கலைஞரின் பேனா சின்னம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த சீமான், எதற்கு பேனா சின்னம்? பள்ளிக்கூடத்தை புனரமைக்க காசில்ல, எந்த பண்ணுச்சு அந்த பேனா. இந்த பேனாவை வைத்து தான் கலைஞர் எழுதினாரா..? அம்பேத்கரின் பேனாவை விட பெரிய பேனாவா?
என்னத்தய்யோ… தண்ட கருமாந்திரம், காசு இருக்கு, அதிகாரம் இருக்கு.. அந்த திமிரில் பண்றதுதான் என்று பேசி உள்ளார். அவரின் முழு வீடியாவை இங்கே கீழே காணலாம்: