Sunday, May 04 12:17 pm

Breaking News

Trending News :

no image

இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம்..! தீப்பிழம்பாகிவிடும்… எச்சரிக்கை..!


சென்னை: தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும். எச்சரிக்கை என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுத்துறை வங்கி மேலாளர் ஒருவர் இந்தி தெரிந்தால் தான் கடன் கொடுப்பேன் என்று ஓய்வு பெற்ற அரசு மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

அவரின் இந்த நடவடிக்கை பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து, அந்த வங்கி மேலாளர் உடனடியாக திருச்சி கிளைக்கு மாற்றப்பட்டார். இந் நிலையில், தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும். எச்சரிக்கை என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? - ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார்.

இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம். தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும். எச்சரிக்கை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Most Popular