சொல்லுங்க... அனுமன் சாலிசா மந்திரம்...! கொரோனா ஓடிடும்..! பாஜக எம்பியின் ‘கிச்சுக்கிச்சு’
டெல்லி: கொரோனாவை ஒழிக்க அனுமன் சாலிசா மந்திரம் சொல்லுங்கள் என்று பாஜக எம்.பி பிரக்யா தாகூர் கூறியிருப்பது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
200 நாடுகளில் பரவி உள்ள கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஏராளமான ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். ஆனால், கொரோனாவை இப்படி கட்டுப்படுத்தலாம், அப்படி கட்டுப்படுத்தலாம் என்று பலவித கருத்துகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இத்தகைய செயல்களில் பாஜகவினரும், அதன் ஆதரவு அமைப்பினரும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர். கொரோனா போக பசு கோமியம், பாபுஜீ அப்பளம் என நகைச்சுவை கலாட்டாக்கள் அரங்கேறின.
இப்போது அடுத்த இன்னிங்சாக பாஜகவின் பிரபல முகமும், எம்பியுமான பிரக்யாசிங் தாகூர் ஒரு சர்ச்சையை ஓபன் பண்ணிவிட்டுள்ளார். அதாவது அனுமன் சாலிசா மந்திரத்தை சொன்னால் கொரோனா ஓடி போய்டும் என்பது தான் அது.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: 5 முறை நாள்தோறும் அனுமன் சாலிசா மந்திரம் சொன்னால் போதும், உலகத்திலிருந்தே கொரோனா ஓடி போய் விடும் என்று கூறி அடுத்த விவாதத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாக என்பதை விட எதிர்ப்பான கருத்துகளே அதிகம் பரவி உள்ளன.