வீட்டில் இருந்தே ரூ.50,000 வருமானம்…! மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு இதோ…!
டெல்லி: வீட்டில் இருந்து கொண்டே 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறும் அறிவிப்பு,ஒன்றை மத்திய அரசு வெளியிட்டு அசத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ்… அனைத்து தரப்பினரின் வருமானத்தை அள்ளி வாயில் போட்டுக் கொண்ட வைரஸ். இப்படிப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ருபாய் என்றால் எப்படி மனது துள்ளி குதிக்கும். அதுவும் வீட்டில் உட்கார்ந்த படியே என்றால்… கேட்கவே வேண்டாம். மனது பூமிக்கும், வானத்துக்கும் போய், போய் வரும்.
இந்த 50 ஆயிரம் வருமானத்துக்காக வாய்ப்பு அள்ளி தந்திருக்கிறது மத்திய அரசு. லோகோ வடிமைப்பு போட்டி மூலம் இந்த பணத்தை அள்ளலாம். போட்டியில் வென்றால் உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும்.
சரி… இந்த போட்டிக்காக எங்கு போக வேண்டும்..? என்ன செய்ய வேண்டும்..? ரொம்ப சிம்பிள். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். ஒரு நாடு, ஒரு ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்துக்கு தான் யார் வேண்டுமானாலும் லோகோ வடிவமைத்து 50 ஆயிரத்தை பெறலாம். இந்த விவரங்கள் எல்லாம் மைகவ் இந்தியா (myGov.im) வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். போட்டியின் வெற்றியாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தரப்படும்.
இதில் கலந்து கொள்வது ரொம்ப ஈஸி… முதலில் myGov.in என்ற போர்ட்டலுக்கு செல்லவேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். கலந்து கொள்வோருக்கு வயது வரம்பு கிடையாது.
நீங்கள் வடிவமைக்கும் லோகாவானது JPEG, BMP, TIFF பார்மேட்டில் 600 dpi resolution என்ற வகையில் இருக்க வேண்டும். லோகோ இந்தி அல்லது ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு இருத்தல் அவசியம். லோகோ பற்றி நீங்கள் கூறும் விவரங்கள் 100 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.