இது எப்படி இருக்கு…? ராமர் கோயிலுக்கு நிதி கொடுத்த திமுக மா.செ…!
விழுப்புரம்: அயோத்தி ராமர் கோயிலுக்கு திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் 11 ஆயிரம் நிதி உதவி அளித்து பரபரப்பை கூட்டி இருக்கிறார்.
சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் சுப்ரிம் கோர்ட் உத்தரவுப்படி ராமர் கோயில் அமைகிறது. கோயிலுக்கான பிரம்மாண்ட பூமி பூஜையும் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கென ஆர்எஸ்எஸ், பாஜகவினர் நிதி திரட்டி வருகின்றனர். இந் நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக 11 ஆயிரம் நிதி கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
ராமர் கோயில் நிதி உதவிக்காக விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஏடி கலிவரதன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் அவர் மஸ்தானையும் அணுக, 11 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.
திமுகவை சேர்ந்த ஒருவர், சிறுபான்மையினத்தை சேர்ந்த மா செ ஒருவர் ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நிதி கொடுத்ததை பாஜகவினர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.