இழுத்து மூடுங்க…! 5ங் கிளாஸ் பையன் அதை செய்வான்…! அசால்ட் அன்புமணி
சென்னை வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடிவிடலாம், அது செய்யும் வேலையை 5ங் கிளாஸ் மாணவன் செய்துவிடுவான் என்று பொங்கி இருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
நெல்லையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்க நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம்;
காலநிலை மாறுவது என்பது உலகம் தழுவிய பிரச்னை. திட்டமிடுதல் இருந்தால் அனைத்தும் நன்றாக நடக்கும், சென்னை வானிலை ஆய்வு மையம் அவசியமில்லை, அதை மூடிவிடலாம்.
வானிலை மையத்தின் வேலையை 5ம் வகுப்பு மாணவனால் செய்திட முடியும், அவன் அந்த வேலையை செய்துவிடுவான். கனமழை, லேசான மழை என்று தான் வானிலை மையம் எப்போதும் அறிவிக்கிறது.
சுதந்திரத்துக்கு முன்பிருந்த நிலைதான் வானிலை மைய அறிவிப்பில் நிகழ்கிறது. மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் மாநில அரசு கேட்கும் நிதியை தரவேண்டும் என்று கூறி உள்ளார்.