வரும் 8ம் தேதி முதல் முழு ஊரடங்கு…! முதலமைச்சர் அறிவிப்பு….!
திருவனந்தபுரம்: கொரோனாவின் பரவல் உச்சக்கட்டத்தில் இருப்பதால் வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி முழு ஊரடங்கை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வருகிறது. 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று இருந்த தினசரி பாதிப்பு இப்போது 40 ஆயிரத்தை கடந்துவிட்டது.
நேற்று மட்டும் ஒரே நாளில் 41,953 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 58 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந் நிலையில் மாநிலத்தில் வரும் 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பால், காய்கறிகள், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.