எய்ம்ஸ் கல்லு.. எடப்பாடி பல்லு..! எப்படி எல்லாம் பேசுறாங்க
செங்கல் என்றால் இப்போது எல்லாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது என்னவோ வீடு அல்ல… எய்ம்ஸ் தான். அப்படி ஒரு பிரச்சாரத்தை ஒத்தை செங்கலை கையில் பிடித்து உதயநிதி பிரச்சாரம் செய்தாலும் செய்தார்.. இன்னும் அந்த செங்கல் பஞ்சாயத்து முடிவுக்கு வரவில்லை.
தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும் செங்கலுடன் ஊர்தோறும் தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்து இருக்கிறார். காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்துக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்தார். எய்ம்ஸ் செங்கலை யாருக்கும் தரமாட்டேன், ஆனா எடப்பாடி சொல்றது என்ன? ஒரே ஸ்கிரிப்டை வச்சு நான் பேசிட்டு இருக்கேன்னு சொல்றாரு?
எய்ம்ஸ் கல்லை வச்சுத்தான் நான் பிரச்சாரம் செய்றேன்.. ஆனா இங்கே ஒருத்தர் பல்லை காட்டி இருக்கிறார் என்று கூறி பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போட்டோவை காட்டி அலப்பறை செய்துள்ளார்.
உதயநிதியின் இந்த காமெடி பேச்சை கேட்டு கூட்டத்தில் உள்ளவர்கள் நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தனர். போதாத குறைக்கு இந்த பேச்சை மட்டும் திமுக IT WING குழுவினர் தனியாக edit செய்து சமூக வலைதளங்களில் ஓட விட்டு உள்ளனர்.