திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அந்த 4 பேர்..! குழு அமைத்த மதிமுக
சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த மதிமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. பாமகவுடன் பேச்சு நடத்திய அதிமுக அக்கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந் நிலையில் மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் நாளை திமுகவானது தொகுதி பங்கீடு குறித்து பேச்சவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. அதே நேரத்தில் திமுகவுடன் பேச்சு நடத்த மதிமுக குழு ஒன்றை அமைத்து இருக்கிறது.
4 பேர் கொண்ட இந்த குழுவில் மல்லை சத்யா, செந்திலதிபன், சின்னப்பா, அந்திரி தாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாளை டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவை இக்குழு சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கும்.