இது சீமானின் உருட்டுகள்…! உ.பி.க்கள் பொளக்கும் வீடியோக்கள்
சென்னை: சீமான் பேசும் மேடை பேச்சுகள் பல இருந்தாலும், அவற்றில் சில எப்போதும் பேமஸ். அப்படிப்பட்ட வீடியோக்களை திமுக ஆதரவாளர்கள் மீண்டும் கையில் எடுத்து அதகளம் ஆக்கி இருக்கின்றனர்.
எந்த பிரச்னை என்றாலும் கருத்து சொல்வதில் அப்படி போடு என்று பேசுபவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். சமூக வலைதளங்களில் இவரின் பேச்சுகள், நடவடிக்கைள் எப்போதுமே ட்ரோல் மோடில் தான் இருக்கும்.
கொட்டும் மழையில் பேசுவார், நரம்புகள் புடைக்க பேசுவார்.. பேச்சின் போது அங்கெங்கே ஈழக்கதைகள், ஆமைக்கறி, இலங்கை போர் என்று பேசி தம்பிகளை கைதட்டி ஆரவாரம் செய்ய வைப்பார். இயற்கை உணவு, தமிழ், தமிழர்கள் ஆடை, தமிழர் பாரம்பரியம் என்று பேசுவார்… சொகுசு காரில் போவார், உயர் ரக காலணி அணிவார் என்பது அவர் மீது இப்போதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு.
அதையும் தாண்டி இவரின் அரசியல் பேட்டிகள் வெகுஜன அரசியலை தாண்டி எப்போதுமே பிரபலம். லேட்டஸ்ட்டாக அமைச்சர் மா. சுப்ரமணியன் விடுத்த விவாத அழைப்பை ஏற்று நேரத்தை சொல்லுங்க வர்றேன் என்று அதிரடி காட்டி உள்ளார்.
அவரின் பேட்டி அப்படிக்கா இணைய ஊடகத்தில் உருண்டு கொண்டு இருக்க… இப்படிக்கா அவரின் பழைய உருட்டுகளை தேடி கண்டுபிடித்து உலவ விட்டுள்ளனர் திமுக ஆதரவாளர்கள் மற்றும் அபிமானிகள்.
அதில் இப்போது வெளியாகி உள்ள சீமானின் உருட்டல்கள் டாப் கிளாஸ் என்றே சொல்லலாம். கடந்த காலங்களில் அவர் பேசிய மேடை பேச்சுகளை தொகுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ப்ளாஷ்பேக் நினைவூட்டுகின்றனர் திமுக+திமுக அபிமானிகள்.
பழசு என்றாலும் திரும்ப, திரும்ப கேட்பதாக இருக்கிறது என்பது தான் ட்விட்டிராட்டிகள் version…! அந்த வீடியோ இணைப்பு செய்தியின் கீழே இணைப்பாக தரப்பட்டு இருக்கிறது.