Sunday, May 04 11:51 am

Breaking News

Trending News :

no image

மதுசூதனனை பார்த்துவிட்டு சசிகலா சொன்ன ஒத்த வார்த்தை…! ஜெர்க்கான ஓபிஎஸ், இபிஎஸ்


சென்னை: மதுசூதனனை சசிகலா சந்தித்துவிட்டு அளித்த பேட்டியில் சொன்ன ஒரு வார்த்தை அதிமுக முகாமை மொத்தமாக குழப்பிவிட்டுள்ளது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகம் இன்று காலையில் பரபரப்பாக காணப்பட்டது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சிறுநீரக பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மதுசூதனன் அதிமுகவின் மிக மூத்த உறுப்பினர்.

அது 1952ம் ஆண்டு… அப்போது மதுசூதனனுக்கு வயது 14. அந்த சின்ன வயதில் எம்ஜிஆருக்காக வட சென்னையில் எம்ஜிஆர் மன்றம் ஆரம்பித்து அசால்ட் காட்டியவர். தலைவர் மீது என்றும் மாறா பற்று கொண்டவர். அவர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர்.

இப்படிப்பட்ட கடசியின் மூத்த உறுப்பினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற தகவல் நேற்றிரவே அதிமுக வட்டாரங்களில் கசிந்தது. நேற்றிரவே ஓபிஎஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துவிட்டார்.

இன்று காலை சசிகலா நிச்சயம் வருவார் என்று அதிமுக வட்டாரத்தில் ஒரு பரபரப்பு ஓடியது. அவர் வருவதற்கு முன்பாக மதுசூதனை பார்த்துவிட வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி காலை 11.45க்கு அப்பல்லோ வந்தார்.

இதையறிந்த சசிகலா, முன்பே திட்டமிட்ட நேரத்தை விட தாமதமாகவே வந்தார். எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்கள் சந்திப்பு திட்டமிட்டவர் சசிகலா வருகையை அறிந்து பிரஸ்சை பார்க்காமல் சென்றுவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி சென்ற பின்னர் சசிகலா வர… மருத்துவமனை வளாகமே பரபரத்தது. அவர் வந்தது ஜெயலலிதாவின் காரில்… அந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருக்க… இதய தெய்வம் மாளிகையில் பரபரப்பு தொற்றியது.

மதுசூதன், அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்படியே காரில் இருந்தபடியே செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய சில விஷயங்கள் தான் இப்போது அதிமுக தலைமைக்கு பெரும் குழப்பமாக உள்ளது.

மதுசூதனின் கட்சி பணிகள், தலைமை மீது அவர் கொண்ட பாசம் ஆகியவற்றை விவரித்தவர் ஒரு முக்கிய வார்த்தையை சொன்னார். எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த சகோதரர் மதுசூதனன் என்று விளித்தார்.

அவரின் இந்த எங்கள் அதிமுக என்ற வார்த்தை தான் அதிமுக தலைமையை லேசாக அசைத்து பார்த்திருக்கிறது. இதற்கு முன்னதாக அவர் இப்படிப்பட்ட வார்த்தையை பயன்படுத்தியது இல்லை என்கிறார்கள் அதிமுக பற்றி நன்கு அறிந்தவர்கள்.

ஆடியோ அரசியல், தொலைக்காட்சி பேட்டி என்று மெல்ல, மெல்ல அதிமுக, அமமுக இணைப்பு என்ற புள்ளியை நோக்கி சசிகலா நகருவதின் ஒட்டுமொத்த பெயர் தான் எங்கள் அதிமுக அவர் கூறக்காரணம் என்கின்றனர் அவர்கள். இனி அடுத்து வரக்கூடிய காலங்களில் சசிகலாவின் நகர்வுகள் வேற ரூட்டில் பயணிக்கக்கூடும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….!

Most Popular