Sunday, May 04 01:01 pm

Breaking News

Trending News :

no image

இன்று நடக்கவிருந்த கிராம சபை கூட்டம்…! அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு


சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ். பழனிசாமி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந் நிலையில் நேற்று கிராமசபை கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. அதற்கான உத்தரவை அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனரகம், அனைத்து ஊரக உதவி இயக்குனர்களுக்கும் அனுப்பி இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்த அனைத்து பஞ்சாயத்துக்களும் தெரிவித்து,  ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Most Popular