மா.கம்யூ வேட்பாளர்கள் பட்டியல் இதோ…! அமைச்சர்களை எதிர்க்கும் காம்ரேடுகள்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: கீழ்வேளூர் (தனி) தொகுதியில் நாகை மாலி, திருப்பரங்குன்றம் தொகுதியில் பொன்னுத்தாய், கந்தர்வக்கோட்டையில் சின்னதுரை, அரூர் தொகுதியில் குமார், திண்டுக்கல் தொகுதியில் பாண்டி, கோவில்பட்டியில் சீனுவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் vவெற்றி பெறுவார்கள் என்று கூறினார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து பாண்டி போட்டியிடுகிறார். கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக, தினகரனை எதிர்த்து சீனுவாசன் போட்டியிடுகிறார்.