பவர்ஸ்டார் சீனிவாசனை கல்யாணம் பண்ணிய வனிதா விஜயகுமார்…? தீயாய் ஒரு போட்டோ
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார், காமெடி ஸ்டார் பவர் ஸ்டார் சீனிவாசனை கல்யாணம் செய்து கொண்டதாக ஒரு போட்டோ இணையத்தில் சுற்றி, சுற்றி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் நடிகை வனிதா விஜயகுமார். மனதில் பட்டதை நேரடியாக வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். அதனால் தான் அவர் செயல்கள் பல தருணங்களில் சர்ச்சையாவது உண்டு.
பிக்பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். எந்த நிகழ்ச்சியிலும் சர்ச்சை இல்லாமல் இருந்தது கிடையாது.
லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடுவர்களுடன் மல்லுக்கட்டிய அவர் பின்னர் அதில் இருந்து விலகினார்.
கடந்த சில வாரங்களாக அவர் 4வது திருமணம் செய்து கொண்டார் என்று பேச்சு ஓடியது. இந் நிலையில் வனிதா விஜயகுமார், காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கல்யாணம் செய்து கொண்டதாக ஒரு போட்டோ இணையத்தில் தீயாய் சுற்றி வருகிறது.
கழுத்தில் மாலையும் கழுத்துமாக இருவரும் திருமண கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். இந்த போட்டோவை இணையத்தில் பதிவேற்றிய பல குறும்பு நெட்டிசன்கள் 4வது திருமணம் நடந்துவிட்டதாக கதை கட்டிவிட, போட்டோ வைரலாகி இருக்கிறது.
என்ன நடக்கிறது என்று விசாரித்ததில்…. படம் ஒன்றின் புரோமோஷனுக்காக வனிதா, பவர் ஸ்டார் இடையே எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனாலும் போட்டோ பற்றிய சர்ச்சைகள் ஓய்ந்தபடி இல்லை.