நம்பிட்டோம்…! அதிமுகவுடன் சண்டை இல்லையாம்..! கூட்டணி தொடருமாம்
மதுரை: அதிமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார்.
மதுரையில் தமிழக பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நம் நாடு விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. மத்திய அரசின் வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை. இந்த மசோதா ஒரு வரப்பிரசாதம்.
பல்வேறு பகுதிகளுக்கு விளை பொருட்களை எடுத்து சென்று விற்கலாம். ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும், ஏற்றுமதியும் செய்யலாம். ஆனால், இந்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துகின்றன.
பாஜக, அதிமுக கூட்டணியில் எந்த மனக்கசப்பும் கிடையாது. கூட்டணி சுமுகமாகவே உள்ளது. கூட்டணிக்கு யார் தலைமை என்ற விவகாரத்தில், தற்போதைய நிலையை தொடரும். தற்போதுள்ள கூட்டணி தொடரும் என்று கூறினார்.