Sunday, May 04 11:59 am

Breaking News

Trending News :

no image

Vijayakant மீண்டும் மருத்துவமனையில்…! கதறும் தொண்டர்கள்


சென்னை: நடிகர் விஜயகாந்த் திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் தொண்டர்கள் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

சமீபகாலமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் விஜயகாந்த் குடும்பத்தினரும், தொண்டர்களும் கவலையில் இருக்கின்றனர். சில வாரம் முன்பு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சீரியஸ் கண்டிஷனில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

விஜயகாந்த் வீடு திரும்பியது அறிந்து தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்க, பேரதிர்ச்சியாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக இந்த செய்தி பேசப்பட்டு வர, இது குறித்து கட்சி நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது; தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார் பரிசோதனை முடித்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்த் சிகிச்சை முடிந்து பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தொண்டர்கள், ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Most Popular