கடைகள், ஓட்டல்கள் இயங்கும் நேரம் குறைப்பு…! வெளியானது புதிய கட்டுப்பாடுகள்..!
சென்னை: கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை உச்சத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்றைய பாதிப்பு 21 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழக அரசு தற்போது புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பின்பற்றப்பட வேண்டிய கட்டுபாடுகளின் விவரம்:
- அலுவலகங்களில் இனி 50 சதவீதம் பணியாளர்களுடன் மட்டும் தான் செயல்பட வேண்டும்.
- பேருந்துகள், ரயில்கள், டாக்சிகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி.
- வணிகவளாகங்களில் உள்ள பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
- குளிர்சாதன வசதி இல்லாமல் மளிகை, காய்கறி கடைகள் இயங்க நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி.
- டீக்கடைகள் மதியம் 2 மணி வரை மட்டும் இயங்கலாம்.
- அனைத்து வகையான ஓட்டல்களிலும் உட்கார்ந்து சாப்பிட அனுமதி கிடையாது, பார்சல்கள் வாங்கி செல்லலாம்.
- இறுதி சடங்குகள், ஊர்வலங்களில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.
- இரவு ஊரடங்கு நேரத்தில் அத்திவாசிய மருத்துவ தேவைகள் என்றால் வெளியில் செல்லலாம்.
- ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களுக்கு அத்தியாவசியம் என்றால் செல்லலாம்.
- மருந்தகங்கள்,பால் வினியோகம் போன்றவற்றுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
- சனி.ஞாயிறுகளில் இறைச்சிக்கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
- அனைத்து கட்டுப்பாடுகளும் மே 6ம் தேதி காலை 4 மணி முதல் வரும் 20ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.