இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சராக பஜன்லால் சர்மா இன்று பதவியேற்கிறார். அதற்கான விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கொசஸ்தலை ஆற்றில் கலக்கப்பட்டு உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற ஒடிசாவில் இருந்து வல்லுநர் குழுவினர் வர இருக்கின்றனர்.
தேமுதிகவின் புதிய பொது செயலாளராக தேர்வாகி உள்ள பிரேமலதாவுக்கு அனைத்து கட்சிகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பைகோனார் மாவட்டத்தில் ஹனுமன் சோனி என்பவரும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பான போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பரவலாக கனத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தர்ம தரிசனம் செய்து வருகின்றனர் என்று கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.
திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பண மோசடி குறித்த வழக்கு ஜனவரி 3ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மழை வெள்ள பாதிப்பு எதிரொலியாக டிசம்பர் மாதம் மின் கணக்கீடு கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
573வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகுவார் என்று தெரிகிறது. கணுக்காலில் ஏற்பட்ட காயமே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.