தமிழ் திரையுலகை சூழ்ந்த சோகம்…! பிரபல நடிகர் கொரோனாவுக்கு மரணம்…!
சென்னை: பிரபல நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளது, தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் திரையுலகத்துக்கு இதுபோதாத, சோகமான காலம் என்று கூறலாம். பிரபல நடிகர் பாண்டு, கில்லி மாறன், கேவி ஆனந்த், நிதிஷ் வீரா என பலரையும் கொரோனா அபகரித்துக் கொண்டது. அப்படியிருந்தும் கொரோனாவின் கோர பசி அடங்கவில்லை.
பிரபல நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். 2019ம் ஆண்டு ரிலீசான தொரட்டி படத்தின் கதாநாயகனாக இவர் நடித்து உள்ளார். அதில் ஷமனின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இந் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த ஷமன் மித்ரு பலியாகி உள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.