ஸ்டாலின் தான் வந்தாரு... நீச்சலடிக்க வுட்டாரு...!
சென்னை: திமுக அரசின் மழை வெள்ள மீட்பு பணிகளை மக்கள் எவ்வாறு மதிப்பிட்டு உள்ளனர் என்ற வீடியோ ஒன்றை அதிமுக வெளியிட்டு ரணகள படுத்தி இருக்கிறது.
மிக்ஜாமை மக்கள் மறந்துவிட்டு, இப்போது வெள்ளநீரை எப்போது வெளியேற்றுவீர்கள் என்று குரலுடன் சென்னை மக்கள் கதறி வருகின்றனர். விஐபி சாலைகள், விஐபி குடியிருப்பு வளாகங்கள் தவிர்த்து சாமானிய மக்கள் வசிக்கும் இடங்கள், புறநகர் பகுதிகளை அரசாங்கம் எட்டி பார்க்க வில்லை.
குறிப்பாக வடசென்னை பகுதியில் அரசு நிர்வாகம் எங்கே உள்ளது என்று மக்கள் பொங்கி இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு பகுதியில் மக்களின் மனநிலை என்ன என்பதை பதிவிட்டு அதை வீடியோவாக அதிமுக வெளியிட்டு உள்ளது.
அதில் பேசும் பெண் ஒருவர், ஸ்டாலின் தான் வந்தாரு... நீச்சலடிக்க வுட்டாரு...! என்று பொங்கி திமுக அரசை கழுவி ஊற்றி இருக்கிறார். இன்னும் சில பெண்களே வெள்ள நீர் அப்படியே இருக்கிறது, விஷ ஜந்துகள் நடமாட்டம் வேறு என்று கதறுகின்றனர்.
வயதான ஒருவர் ஏக வசனத்தில் அரசாங்களை அர்ச்சிக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மக்களின் குமுறல் வலுவானதாக காட்டப்படும் இந்த வீடியோவை அதிமுக தமது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறது.
அந்த வீடியோவை செய்தியின் கீழே காணலாம்: