மூடியாச்சு…! இனிமே இந்த பேங்க் கிடையாது…! உஷார் மக்களே..!
டெல்லி: யுனைடெட் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது.
நிதி நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி, அப்படிப்பட்ட வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்து வருகிறது. இப்போது அதன் பட்டியலில் மேலும் ஒரு வங்கி இணைந்துள்ளது.
யுனைடெட் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து இருக்கிறது. யுனைடெட் வங்கியிடம் இனி மூலதனம், வருவாய் ஆகியவை இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது.
வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் பயப்பட வேண்டாம். அனைத்து டெபாசிட்தாரர்களுக்கும் பணம் முழுமையாக திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இனி மேல் யுனைடெட் வங்கியில் பரிவர்த்தனை செய்ய முடியாது. டெபாசிட் வாங்குவது, அதை திருப்பி தருவது போன்ற பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆகவே வாடிக்கையாளர்கள் வங்கி பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.