திமுக கூட்டணி எம்எல்ஏவை அடித்து விரட்டிய மக்கள்…! பரபர வீடியோ
சென்னை: வெள்ள சேதத்தை பார்க்க வந்த திமுக கூட்டணி எம்எல்ஏவை மக்கள் அடித்து விரட்டி தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளனர்.
சென்னையில் மழைவிட்டது… ஆனால் வெள்ளநீர் இன்னும் வடியவில்லை. அனைத்து துறை அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையாக மீட்பு பணிகளில் இறங்கி வருகின்றனர். ஆனாலும் பல பகுதிகளில் மக்கள் வெள்ள நீரில் உணவின்றி, மின்சாரம் இன்றி தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
மக்கள் கண்ணீரிலும், பசியிலும் தத்தளித்துக் கொண்டு இருக்க வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா ஒரு கருத்தை அண்மையில் பகிர்ந்திருந்தார்.
இயற்கை பேரிடம் என்பது சர்வ சாதாரணம். அப்போது இதுபோன்று நடக்கத்தான் செய்யும், நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், மழைநீரை கடல் உள்வாங்கவில்லை எனில் என்ன செய்ய முடியும் என்று கூறி இருந்தார்.
பொறுப்பான மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்கள் நலன் காப்பதை விட்டு, சிரமம் என்றால் ஏற்கத்தான் வேண்டும் என்று அவர் தெரிவித்தது, பெரும் சர்ச்சை மற்றும் கண்டனத்தை உருவாக்கியது.
இந் நிலையில் வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மழைசேத பணிகளை ஆய்வு செய்ய எம்எல்ஏ அசன் மவுலானா போயிருக்கிறார். ஏற்கனவே இவரின் அறிவுப்பூர்வமான பதிலால் காண்டாகி இருந்த மக்கள், அசன் மவுலானாவை கண்டவுடன் கொதித்துவிட்டனர்.
எம்எல்ஏவா நீ…? எங்க வந்த..? என்று கொந்தளிப்புடன் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மக்கள் ஆவேசத்துடன் தன்னை சுற்றி இருப்பதை கண்டு அசன் மவுலானா காரை நோக்கி நகர ஆரம்பிக்க, மக்களும் விடாமல் அவரை திணறடித்தனர்.
இந்த காட்சிகளை அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் தமது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பகிரும் அனைவரும் மிச்சமுள்ள எம்எல்ஏக்கள் எல்லாம் எங்கே போனார்கள்? போட்டோ, வீடியோவுக்காக எடுக்கப்பட்ட சம்பவம் என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.