அமெரிக்காவில் ‘கெத்து’ காட்டிய ரஜினி… வைரலான ‘மாஸ்’ போட்டோ…!
அமெரிக்காவில் டீ சர்ட், தொப்பி சகிதம் மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் கெத்தாக நடந்து வரும் போட்டோ வைரலாகி உள்ளது.
கொரோனா தொற்றுகளுக்கு இடையே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அண்ணாத்த படத்தில் தமது போர்ஷனை முடித்து கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். படத்துக்கான டப்பிங் வேலைகளை அவர் செய்து கொடுத்துவிட்டார்.
ஷூட்டிங் முடிந்து சென்னையில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த ரஜினி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனி விமானம் மூலம் அமெரிக்கா பறந்தார். தமது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்றிருக்கிறார்.
கொரோனா பரவல் தள்ளி போய் கொண்டே இருந்த பயணம் ஒரு வழியாக முடிவாக இப்போது அமெரிக்காவில் இருக்கிறார் ரஜினி. அவரை உடன் இருந்து பார்த்து கொள்கிறார் மகள் ஐஸ்வர்யா.
சரி… அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கிறார் ரஜினி என்பதற்கு பதில் கூறும் விதமாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அமெரிக்காவில் மயோ கிளினிக் என்ற மருத்துவமனையில் இருந்து அவர் வெளியே வரும் போட்டோ தான்.
அதுவும் எப்படி… தலையில் தொப்பி, டீசர்ட், ஷூ என பாக்கெட்டில் கைவிட்ட படி படு ஸ்டைலாக நடந்து வரும் போட்டோ. அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் நடந்து வருகிறார். அனேகமாக அவர்கள் தங்களது காரை நோக்கி செல்வது போன்று தான் இந்த போட்டோவில் தெரியவருகிறது.
சிறிது தூரத்தில் இருந்து அந்த போட்டோ எடுக்கப்பட்டாலும் ரஜினியின் மேனசரித்தை பார்க்கும் போதே தெரிகிறது…இது அவர் தான் என்று.. அவரை தவிர யாரும் இவ்வளவு ஸ்டைலாக, கெத்தாக நடந்து வர முடியாது என்று ரசிகர்கள் குஷியாகி இணையத்திலி இந்த போட்டோவை தெறிக்கவிட்டு வருகின்றனர்.