Sunday, May 04 11:49 am

Breaking News

Trending News :

no image

குஷ்புவை தள்ளி வைக்கும் பாஜக..? 'அந்த' விஷயம் தான் காரணமா..?


சென்னை: பாஜகவின் டெல்லி தலைமை குஷ்புவை ஓரங்கட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திடீர், திடீர் என்று அரசியலில் மாற்றங்கள் நிகழும். இந்த வாரம் ஒரு கட்சியில் இருந்து மாற்று கட்சியை மண்ணில் புரட்டும் அளவுக்கு கருத்து கந்தசாமிகளாக மாறி சீறுவார்கள்.

பொசுக்கென்று வானிலை போல அனைத்தும் மாறும்… அப்படிக்கா போய் எந்த கட்சியை கழுவி ஊத்தினார்களோ அங்கேயே சரணாகதி ஆவார்கள். அப்படி லேட்டஸ்ட் உதாரணமாக காட்டப்படுபவர் குஷ்பு. காங்கிரசையும், அதன் தலைமையையும் வானார புகழ்ந்த அவர்.. பொசுக்கென்று தேர்தலுக்கு முன்பாக பாஜக பக்கம் தாவினார்.

பாஜக தான் ஆளுமையின் சிகரம், மக்களின் கட்சி என்று எல்லாம் முழங்கி தள்ளினார். கட்சியில் சேர்ந்த உடன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக வலம் வந்தார்.

பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பினாலும் அவரால் வெல்ல முடியவில்லை. எந்த கருத்தாக இருந்தாலும்…கட்சி தலைமையை பற்றியதாக இருந்தாலும் டோன்ட் ஒர்ரி…என்று அதிரடி கருத்துகளை பேசுபவர். அப்படித்தான் 8 ஆளுநர்கள் நியமனத்தில் ஒரு டுவிட்டரை போட்டு தாக்கினார்.

புதிய ஆளுநர்களில் ஏன் ஒரு பெண் கூட இல்லை? என்று கேள்வி மேல் கேள்வி டெல்லி தலைமையை அதிர வைத்தார். ஆளுநர் நியமனம் என்பது மத்திய அரசு மேற்பார்வையில் நடைபெறும் ஒன்று என்று தெரிந்தும்… ஏன் இப்படி சொன்னார்? குஷ்புவுக்கு ஆளுநர் பதவி கிடைக்கவில்லை போலும் என்றும் கமெண்டுகள் விழுந்தன.

நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தேர்தல் பணிக்குழுவில் அவர் இடம்பெறவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, கே.டி.ராகவன், செல்வகுமார், ராம சீனிவாசன், கரு.நாகராஜன், கார்த்தியாயினி, வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி, சசிகலா புஷ்பா, நரசிம்மன் உள்ளிட்டோர் குழுவில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் குஷ்பு பெயர் பட்டியலில் இல்லை.

குஷ்புவின் பெயர் இல்லாமல் போனது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சலசலப்பு கட்சிக்குள் மட்டுமல்லாது…. கட்சிக்கு வெளியேயும் பேசு பொருளாகி விட்டதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன.

சட்டசபை தேர்தலில் அவருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் இப்போது இல்லை…? என்ற கேள்விகளும் வெகு இயல்பாகவே எழுந்துள்ளது. ஆளுநர் நியமனத்தில் டெல்லி தலைமையே கேள்வி கேட்டு சங்கடப்படுத்தும் அளவுக்கு அவர் நடந்துகொண்டார்…?

கட்சிக்குள் இருந்து கொண்டு, அதுவும் குடியரசு தலைவரிடம் இப்படி கேள்வி எழுப்புவது என்ன நியாயம் என்று கேள்விகள் மேல்மட்டத்தில் எழுந்ததாம். அதன் தொடர்ச்சியாக கட்சியின் தேர்தல் பணிக்குழுவில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. இல்லை.. இல்லை கட்சியில் முக்கிய பொறுப்பு ஏதேனும் அளிப்பார்கள்… அதற்காக தான் இப்படி செய்கிறார்கள் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன. ஆனால்.. அவர் இப்போது தேர்தல் பணிக்குழுவில் இல்லை என்பதுதான் உண்மை..!

Most Popular