ரஜினிகாந்தின் புதிய பட அறிவிப்பு வெளியீடு… அட… இவர்தான் இயக்குநரா..? மாஸ் தகவல்
சென்னை: ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் நடிப்பாரா? எப்போது நடிப்பார்? என்பது குறித்து ஒவ்வொருவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அவர் படம் நடிப்பது உறுதி என்று கூறப்பட்டாலும் இயக்குநர் யார்? தயாரிப்பாளர் யார்? என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
இப்போது அதற்கு எல்லாம் தெளிவான விடை கிடைத்துவிட்டது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 169வது படமாகும்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜய்யின் படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக அவர் ரஜினிகாந்தை இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார்.
ரஜினிகாந்தின் புதிய பட அறிவிப்பு வெளியாகி உள்ளதால் அவரது ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர். படத்தின் கதை என்னவாக இருக்கும்? அதில் ரஜினியின் கதாபாத்திரம் என்ன என்று இப்போது எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.