Sunday, May 04 01:08 pm

Breaking News

Trending News :

no image

பாஜக பிளான்…! மாஸ் காட்ட போகும் எல். முருகன்…! குழம்பி தவிக்கும் கழகங்கள்…!


சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் இப்போது மேற்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்புகள் மத்திய அமைச்சர் எல். முருகனிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாக டெல்லியில் பேச்சாக உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதை நோக்கி தான் கழகங்கள் அணிவகுக்க உள்ளன. அதிமுக, திமுக  ஆகிய கூட்டணியில் இப்போது இணைந்திருக்கும் அதே கட்சிகள் தான் உள்ளாட்சி தேர்தலிலும் களம் இறங்கும் என்று தெரிகிறது.

ஒரேயொரு சின்ன மாற்றமாக, தேமுதிக திமுக அணியுடன் கை கோர்க்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் அண்மையில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் வீடு தேடி போய் சந்தித்தார் என்றும் கூட பேசப்பட்டது.

கழகங்கள் இப்படி உள்ளாட்சி தேர்தல் கூட்டல், கழித்தலில் பாஜகவோ தமது பிளான் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை நோக்கி தான் என்கிற ரீதியில் களம் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்பி தேர்தலுக்காக சில வியூகங்களை தமிழகத்தில் பாஜக டெல்லி மேலிடம் வகுத்து உள்ளதாம்.

அதில் மிக முக்கியமாக, பாஜக தலைவர்களுக்கான மீடியா வெளிச்சத்தை பாய்ச்சும் முடிவில் இருக்கிறதாம். கட்சியின் நிலைப்பாடுகள், கொள்கைகள், அரசியல் நிலைப்பாடுகள், கருத்துகள், முக்கிய தலைவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று மெகா திட்டம் எல். முருகனிடம் ஒப்படைத்துள்ளதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம், ஆல் இண்டியா ரேடியோவுக்கு முக்கிய ஆலோசகர்களை பாஜகவின் மூத்த தலைவர்களை நியமிக்க உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் ஊடக ஆதரவு பாஜகவுக்கு குறைவு என்று பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இப்படி ஒரு பிளான் வொர்க் அவுட் செய்யப்பட்டு உள்ளதாம்.

அதேபோல இளம் தலைவர் அண்ணாமலை நியமனத்தால் கொதிப்பில் இருக்கும் சீனியர்களுக்கு புதுப்புது பதவிகள் தந்து அழகு பார்க்க நினைக்கிறதாம் பாஜக தலைமை. விரைவில் தேசிய அளவில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் அமர வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த 2 தொலைநோக்கு திட்டங்களும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கியே இருக்கும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் 3வது முறையாக வென்று மத்தியில் வலுவாக கால் ஊன்ற பாஜக நினைப்பதாகவும், தமிழகத்தில் எப்படியாவது 10 எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளதாம்…!

இப்படி கசியவிடப்பட்டு உள்ள தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை விட கழகங்களும் இதையறிந்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு விரைவில் தயாராகும் என்பது தான் லேட்டஸ்ட் தகவல்…!

Most Popular