Sunday, May 04 01:08 pm

Breaking News

Trending News :

no image

சாகல…பால் ஊத்தாதீங்க…! சென்னை மேயரை ‘தெறிக்க’ விட்ட மக்கள்


சென்னை: நாங்க இன்னும் சாவல… நீங்க எங்களுக்கு பால் ஊத்தாதீங்க மேடம் என்று சென்னை மேயரை பெண்கள் ரவுண்டு கட்டி விமர்சித்துள்ளனர்.

மிக்ஜாம் வந்தது, சென்னையை ஜாமாக்கிவிட்டு ஆந்திரா போனது. மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல… மழை நின்றது. ஆனால் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மக்களை இன்னமும் பாடாய் படுத்தி வருகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னையின் நிலைமை இப்பவும் சுமூகமாக இல்லை என்பதே களநிலவரம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். சென்னை எப்பவும் திமுக கோட்டை என்பது மாறி, மிக்ஜாம் புயலால் அங்கு விழுந்தது ஓட்டை என்கின்றனர் சொந்த கட்சியினரே.

நகர் பகுதிகளில் மட்டும் அனைத்து வெள்ள நிவாரண பணிகளும் நடந்து முடிந்துள்ளதாகவும், புறநகர் மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரும் எட்டிப்பார்க்கவில்லை என்று பொருமுகின்றனர் மக்கள்.

நேற்று வேளச்சேரியில் திமுக கூட்டணி எம்எல்ஏவை மக்கள் துரத்தி அடித்தது அரங்கேறியது. அதை தொடர்ந்து தற்போது மேயர் பிரியா வீட்டை மக்களை முற்றுகையிட்டு அதகளம் பண்ணியிருக்கின்றனர்.

வீட்டு வாசலில் திரண்ட ஏராளமானோர் பால் கிடைக்கல, தண்ணி கிடைக்கல என்று போட்டு தாளித்து இருக்கின்றனர். வீட்டு வாசலில் மேயர் பிரியா நின்று அவர்களுக்கு பதிலளிக்க அதை காதில் வாங்காமல் தங்கள் குறைகளையும், கோபத்தையும் மக்கள் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

தாம் எடுத்த நடவடிக்கைகள், செயல்பாடுகளை மேயர் பிரியா தமக்கே உரித்தான குரலில் பேச…. நாங்க சாவல, எங்களுக்கு பால் ஊத்தாதீங்க மேடம் என்று பொளந்து கட்டியிருக்கின்றனர்.

இதே போன்ற களேபரங்கள், குமுறல்கள் சென்னையில் தினமும் அரங்கேற, மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்கள் எங்கே போனார்கள்? என்பதே அடுத்த கேள்வியாக இருக்கிறது. ஆமாம்… எங்கே போய்ட்டாங்க..? அவங்க.. கண்டா வரச்சொல்லுங்க என்று கிண்டலடிக்கின்றனர் இளசுகள்…!

மக்களின் ஆவேசம், கோபத்தை அங்கு வந்தவர்களில் ஒருவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular