Sunday, May 04 11:47 am

Breaking News

Trending News :

no image

கமல் பெயரை… டெல்லியில் உச்சரித்த பிரதமர் மோடி…! ஏன்..?


டெல்லி: தமிழகத்தில் தேர்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்களிடம் பிரதமர் மோடி கமல் பற்றி பேசியதாக ஒரு சுவாரசிய தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.

சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் தனித்தே 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று கூறி வந்த தமிழக பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளில் களம் கண்டது. அதில் 4 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் ஜெயிக்க முடிந்தது.

மொடக்குறிச்சி, கோவை தெற்கு, நாகர்கோவில், நெல்லை ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதிகளில் பாஜக எம்எல்ஏக்களாக டாக்டர் சரஸ்வதி, வானதி சீனிவாசன், எம்ஆர் காந்தி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் இருக்கின்றனர்.

அண்மையில் இவர்கள் 4 பேரும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து, வாழ்த்து பெற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வை தான் இப்போது பாஜகவினர் பேசி வருகின்றனர்.

4 எம்எல்ஏக்களுக்கும் தமிழக தலைவர் எல். முருகன் தலைமையில் டெல்லிக்கு சென்றனர். பிரதமருக்கு ஒவ்வொருவராக முருகன் அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது எம்ஆர் காந்தியை அரவணைத்து மகிழ்ச்சி தெரிவித்தாராம்.

பிரதமர் வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களிடம் தனித்தனியே ஆலோசித்து இருக்கிறார். தொகுதிகளுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள்,அரசியல் அணுகுமுறை, சட்டசபை கூட்ட தொடரின் போது நடந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கினாராம். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்ததாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது நடந்த முக்கிய விஷயத்தை தான் இப்போதும் பாஜகவினர் பேசி வருகின்றனராம். அதாவது… கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவை சுட்டிக்காட்டிய எல் முருகன் ஒரு விஷயத்தை பகிர்ந்தாராம்.

இவர் தான் நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்தவர் என்று கூற… பிரதமர் மோடியிடம் இருந்து உடனடியாக ஒரு பதில் வந்ததாம். கமல்… எப்படி இருக்கிறார் என்பது அந்த கேள்விதான்…! அரைமணி நேரத்துக்கும் மேலான இந்த சந்திப்பில் தமிழகத்தில் பாஜகவின் எதிர்கால அரசியல் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

Most Popular