#VasoolRajaModi என்ன சாமி இதெல்லாம்..?
தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நன்கொடை விவகாரம் இன்னமும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. லோக்சபா தேர்தல் நேரத்தில் இதை எப்படி சமாளிப்பது என்ற கோதாவில் அக்கட்சி இறங்கி இருக்கிறது.
ஒன்றல்ல, இரண்டல்ல… பல ஆயிரம் கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றம் உலுக்கி எடுத்த கேள்விகளால் அதன் விவரங்களை எஸ்பிஐ வங்கி சமர்ப்பிக்க, அனைத்து வெளியாகி விட்டன.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக தான் இருப்பதிலேயே அதிக தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றிருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து விமர்சித்து வர, நெட்டிசன்ஸ் சாய்ஸ் வேறாக உள்ளது.
சமூக வலைதளங்களில் #VasoolRajaModi என்ற ஹேஷ்டேக் தான் இப்போது டிரெண்டிங். தங்களின் கற்பனை குதிரையை தட்டிவிட்டு இஷ்டத்துக்கு விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.
அவற்றில் சில சாம்பிள், வாசகர்களின் பார்வைக்கு…..